ஜப்பானியர்களின் மகிழ்ச்சியின் இரகசியம் இதுதான்! என்னனு தெரியுமா?
இன்றைய வாழ்க்கை முறை அதிக மன அழுத்தம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. பொருளாதார தேடலில் மனிதர்கள் தங்களை தொலைத்துக் கொண்டு, துன்பங்கள் சூழ வாழ்கிறார்கள்.
ஆனால் அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கு தான் விரும்புகின்றோம்.ஜப்பானியர்களின் பண்டைய கால வாழ்க்கை முறை இயற்கையுடன் இணைந்து வாழ்வது பற்றி கூறுகிறது. அதனுடைய முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Ikigai
“Iki” (வாழ்க்கை) மற்றும் “gai” (மதிப்பு) ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து வந்தது தான் Ikigai எனும் வார்த்தை அதாவது நாம் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை என இதனை ஜப்பானியர்கள் பின்வற்றி வருகின்றனர்.
இதனை ஆராய்வதன் மூலம் வாழ்க்கையின் மகத்துவம் புரிவதுடன் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்ற புத்துணர்வு வருகின்றது.
Kaizen
இந்த நுட்பம் வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வழங்குகின்றது.
வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்ற முடியும் என இந்த தத்துவம் குறிப்பிடுகின்றது.
Shoshin
வாழ்க்கையில் பெரிதாக எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஆரம்ப கட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த பயிற்சியாக இருக்கின்றது.
அதாவது வாழ்வில் நாமாகவே எதையும் எதிர்வு கூறாமல் என்ன நடக்க போகின்றது என்ற ஆச்சரியத்துடன் வாழ்வை வாழ ஆரம்பித்தால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும் என இந்த தத்துவம் குறிப்பிடுகின்றது.
Hara Hachi Bu
இதனை மொழிபெயர்க்கும் போது “உங்கள் வயிறு 80% நிறையும் வரை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதையே இது குறிப்பிடுகின்றது.
நமது உடலின் தேவையை உணர்ச்து உணவை முழுமையாக அனுபவித்து சாப்பிடுவதன் மூலம் வாழ்கையை மகிழ்ச்சியாகதாக மாற்றலாம் என்பதையே இது குறிக்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் உணவுக்கும் நமக்கும் இடையில் சிறந்த தொடர்ப்பு உருவாக்கப்படுகின்றது.
Shinrin-yoku
காடுகளில் அதிக நேரத்தை செலவிடுவதை ஜப்பானியர்கள் மகிழ்சிக்காக பின்பற்றி வருகின்றனர். ஜப்பானிய மொழியில் ஷின்ரின் என்றால் காடு என்றும் யோகு என்றால் குளியல் எனவும் அர்தப்படுகின்றது.
பசுமை நிறைந்த இடங்களில் இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதனால் மன அழுத்தம் இல்லாமல் போவதுடன் வாழ்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கின்றது.
Wabi-sabi
இந்த தத்துவமாகது இங்கு எதுவும் முழுமையாக சரியாகவும் நேர்த்தியாவும் இருப்பதில்லை என்பதை உணர்த்துவதோடு குறையாடுகளில் இருக்கும் அழகை பெருமதியானதான மாற்ற முயற்சிக்கிக்றது. இன்னும் சொல்லப்போனால் குறைகளிலும் மகிழ்ச்சியடையும் வித்தையை இது போதிக்கின்றது.
Gaman
வாழ்வில் சலால்கள் மற்றும் கடினமான சூழ்நிலை வரும் போது அவற்றையும் மகிழ்ச்சியாக கடக்க முயற்சித்தால் மகிழ்ச்சி தானாக வரும் என்பதையே இது உணர்த்துகின்றது.
எந்த விடயத்திலும் பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதையே இந்த தத்துவம் உணர்த்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |