புலி குட்டிகள் நீச்சல் கற்றுக்கொள்வதை பார்த்ததுண்டா? வைரலாகும் காணொளி
புலிகுட்டிகள் தாய் புலியின் கண்காணிப்பின் கீழ் நீச்சல் கற்றுக்கொள்ளும் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கத்தைப் போன்று புலிகள் ராஜநடை போடுவது கிடையாது. இவை இயல்பாகவே அமைதியான சுபாவத்தை கொண்டுள்ளன.
புலிகள் வேட்டையாடிய இரையை பெரும்பாலும்தனியாகவே உண்ணும். குடும்பமாக உண்ணும்போது, ஆண்புலி, குட்டிகளையும் தாயையும் முதலில் சாப்பிட அனுமதிக்கும்.
முதுகில் குத்துவதில் புலிகளுக்கு நிகர் வேறேதுமில்லை இவை சிங்கத்தை போல் நேருக்கு நேர் எதிரியை சந்திக்கும் தைரியம் அற்றது.
சிங்கத்தை விடவும் பலசாலியாகவும் அதிக வேட்டை திறன் கொண்டதாகவும் புலி இருந்தாலும் அவை எப்போதும் மறைந்திருந்து தான் தாக்கும்.
பெரும்பாலும் எந்த மிருகத்தையும் பின்னின்று தாக்குவதே புலிகளின் வேட்டை முறை. புலிகள் பொதுவாகவே வாழ்க்கையின் ஆரம்பத்தில் நீச்சல் திறன்கள வளர்த்துக் கொள்கின்றன, வழிகாட்டுதலுக்கும் பாதுகாப்பிற்கும் தங்கள் தாயை இவை நம்பியிருக்கும்.
அந்த வகையில் புலிகுட்டிகள் தாய் புலியின் உதவியுடன் நீச்சல் கற்றுக்கொள்ளும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |