76,000 டொலர்களுக்கு விற்பனையான அரியவகை ஜீன்ஸ் பேண்ட்..!
மெக்சிகோவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஒன்று, ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஆடை சேகரிப்பு
இது தொடர்பான ஆராய்ச்சியில், இதனை Levi's நிறுவனம் ஆரம்ப காலக்கட்டங்களில் தயாரித்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்த பேண்ட் தற்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான Kyle Haupert என்பவர் 76 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனை ஏலமிட்ட வீடியோ தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.