தலையில் கரும்பு, சைக்கிளில் செல்லும் தாத்தா! இணையத்தில் கலக்கும் புகைப்படம்
சாலையில் கரும்பைத் தலையில் சுமந்தவாறே சைக்கிளில் முதியவர் ஒருவர் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (85) இவரது தனது மகள் சுந்தரம்பாளை பார்க்க ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும் செல்வார்.
சீர்வரிசை
அதுவும், பொங்கல் கரும்பைத் தலையில் சுமந்தவாறே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தூரம் சைக்கிளில் கொண்டு சென்று சீர்வரிசைகளை மகளுக்குக் கொண்டு செல்கின்றார்.
இந்தநிலையில் இந்த வருடமும் இவர் தனது மகளுக்கு தலையில் கரும்பை கட்டி சென்றுள்ளார்.
இதனை பல மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டடுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செல்லத்துரை கூறுவது
இதுகுறித்து இவர் கூறியுள்ளதாவது
18 வருஷத்துக்கு முன் சுந்தராம்பாளை நம்பம்பட்டியில திருமணம் செய்து வைத்தேன். 10 வருஷமா குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டால். அதன்பிறகு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தையொன்றும் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
பேரப்பிள்ளைகள் பிறந்த வருடத்தில் இருந்த இப்போது வரைக்கும் தவறாமல் பொங்கல் அன்று முதல் நாள் சீர்வரிசையைக் கொண்டுபோய் சேர்த்திடுவேன்.
எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து சைக்கிள்லதான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன்.
கரும்புக் கட்டை வீதியில் கொண்டு செல்லும் போது மற்றவர்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பாடாம பத்திரமாகக் கொண்டு போக வேண்டும் என கவனமா இருப்பேன். ஆண்டாண்டு காலமா கொண்டு செல்வதனால் அதுவே பழகிடுச்சு.
வெல்லம், பச்சரிசி, முந்திரி, மஞ்சள்கொத்து, கரும்புன்னு கொஞ்சம் பொங்க சீர்தான் எடுத்து செல்கிறேன்.
எனக்காக மகளும், பேரப்பிள்ளைங்களும் ஆவலோட காத்திருப்பார்கள். ரொம்ப மகிழ்ச்சியடைவார்கள். அந்த உற்சாகத்துலதான் தொடர்ந்து கொண்டுபோய்க்கிட்டு இருக்கேன்" என்கிறார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவர் கரும்பை கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.