வெயில் காலங்களில் GYM போறிங்களா? அப்போ இதை மட்டும் செய்யாம விடாதீங்க
கோடை காலம் வந்து விட்டாலே நமது உடல் நலத்தில் நாம் கவனமாக இருப்பது அவசியம். இந்த நேரத்தில் நாம் சில விஷயத்தை செய்ய வேண்டும் சில விஷயங்களை செய்ய கூடாது.
இந்த கடுமையான வெப்ப காலத்தில் ஜிம்மிற்கு செல்வோர் எதை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிக வெப்பம்
அதிக வெப்பத்தின் போது நாம் உடற்பயிற்சி செய்தால் அது எமக்கு பல விளைவுகளை கொண்டு வரும். இதன் போது வியர்வை வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி மற்றும் நீரிழப்பு ஆகிய பிரச்சனைகள் வரும்.
நமது உடலில் இயற்கையாக குளிரூட்டக்கூடிய அமைப்பு உள்ளது . இது அதிக வெப்பத்தில் நாம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அது செயலிழக்க தெடங்கும்.
இதனால் உடல் சோர்வான நிலையை அடையும். இந்த நேரத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது எலக்ட்ரோலைட்டுகளும் சேர்ந்து வெளியேறும்.
இந்த எலக்ட்ரோலைட்டுகள் தான் உடலில் திரவத்தன்மையை சமநிலையாக வைத்துக்கொள்ள உதவும். இந்த சமநிலை உடலில் பேணப்படவில்லை என்றால் தசைப்பிடிப்பு, இதய அரித்மியா, பக்கவாதம் சில நேரங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.
எனவே இந்த நேரத்தில் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். பழங்கள் மட்டும் காய்கறிகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். தளர்வான உடைகளை அணிய வேண்டும்.
உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யவேண்டும். நீங்கள் ஆடை அணியும் போது அது வியர்வையை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |