பாம்புக்கு தோல் உரித்து விடும் நபர் - இணையத்தில் வைரலாகும் காணொளி!
தற்காலத்தை பொருத்தவரையில் அன்றாடம் சமூக வளைத்தளங்களில் ஆச்சரியமான பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது அதிகம்.
அந்த வகையில், பாம்பு என்றால் எவ்வளவு பயம் இருக்கின்றதோ அதே அளவுக்கு பாம்பு சம்பந்தப்பட்ட காணொளிகளை பார்ப்பதற்கு மக்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை அதாவது அதன் தோல் இருக்கும். பாம்புகள் அதன் சட்டையை இயற்கையாகவே உரித்துக்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கின்றது.
இது Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது. பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும். இதுவே பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக் காரணம்.
இது இயற்கையாக நிகழும் ஒரு செயற்பாடு ஆனால் தற்போது நபரொருவர் தானாக பாம்பின் சட்டை உரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |