பரபரப்பாக வேலை செய்தவர் அமர்ந்திருந்த போதே மரணம்! என்ன நடந்தது தெரியுமா? பதறவைக்கும் வீடியோ
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தின் கேஷ் கவுண்டரில் அமர்ந்து வழக்கம் போல் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டிருந்த நபர் திடீரென்று உயிரிழந்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் வாடிக்கையாளருக்கு பணம் செலுத்திய பிறகு அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் தனது நாற்காலியில் சாய்ந்த நிலையில் சுயநினைவை இழக்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் நாற்காலியில் இருந்து சரிந்தார். அங்கு வந்த வாடி்கையாளர் ஒருவர் அவர் ஓய்வெடுப்பது போல் நினைத்து கொள்கிறார்.
எதிரில் நிற்கும் வாடிக்கையாளரும் அந்த நபரிடம் பணத்தை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
அப்போது திடீரென அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். முன்பணம் கொடுக்க நின்ற வாடிக்கையாளர் பதற்றத்துடன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார். கீழே விழுந்த நபருக்கு மற்றொரு வாடிக்கையாளர் வந்து உதவ முயற்சிக்கின்றார்.
ஆனால் அந்த நபர் இறந்து விட்டார்.