ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாயாம்: கதிகலங்கி போன பாகிஸ்தான் மக்கள்
பாகிஸ்தானில் இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருவதனால் உணவு பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றுள்ளது.
மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கூறுகிறார்கள்.
சிக்கன் விலை அதிகரிப்பு
இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் கோழிக்கறியும் சேர்ந்துள்ளது.
இதன்படி கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீதம் வெங்காயத்தின் விலை 415 சதவீதம் சமீபத்தில் உயர்ந்துள்ளது.
இதனால் இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ சிக்கன் ரூ.440-480 ஆக இருந்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.650-700 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாபாரிகள் கூறுவது
கோழிகளுக்கு தீவனம் சரியாக வழங்க முடியாத அளவிற்கு தீவனங்கள் விலை அதிகரித்துள்ளதால் சந்தையில் கோழிகளின் வரத்து பெரிதும் குறைந்து விட்டது. அதே நேரத்தில் தேவையும் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், 1500 முதல் 1800 ரூபாய் வரை கிடைத்த, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை கோழி தானியம், தற்போது, 4,000 ரூபாய் வரை விலை வரை செல்கிறது. அதோடு, போக்குவரத்து செலவும் அதிகரித்து, கடைசியில் கோழிக்கறி விலை உயரும் வரை வந்துவிட்டது என்கிறார்கள்.
சிக்கன் சாப்பிட வேண்டாம்
விலை உயர்ந்துள்ள நிலையில், சிக்கன் யாரும் சாப்பிடவேண்டாம். இது உடல் நலத்துக்கு நல்லது கிடையாது என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா கருத்து தெரிவித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் ஒருபக்கம் டென்ஷனாகியாகியுள்ளார்.
