9 வருடங்களாக சுகயீனமுற்ற மனைவியை காப்பாற்ற தன்னலமற்று உழைக்கும் மாமனிதன்!
இலங்கையில் கொழும்பு செட்டித்தெரு பகுதியில் வசிக்கும் நபரொருவர் சுமார் 32 வருடங்களாக கருவாட்டு கடையில் தொழிலாளியாக இருந்து, மனைவியின் உடல் நலகுறைப்பாடு காரணமாக வேலையை விட்டு குறைந்த வருமானத்தில் கடையொன்றை நடத்தி வருகின்றார்.
மனைவியை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் மரவள்ளி கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.இது தெருமுனையில் காணப்படும் ஒரு சிறிய சிப்ஸ் கடை என்றே கூறலாம்.
இவரிடம் மற்றைய இடங்களை விட குறைவான விலையில் அப்போதே பொரித்த மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை சூடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்த சிப்ஸ் விற்று வரும் வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை செய்வதாகவும் உடல் நலம் சரியில்லாத மனைவியையும் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
