ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் மூலிகை எவை தெரியுமா? ஆய்வில் கூறப்பட்டது
இரத்தக் குளுக்கோசுச் செறிவு அல்லது இரத்தச் சர்க்கரை அளவு என்பது மனிதர்களில் அல்லது விலங்குகளில் இரத்தத்தில் கலந்திருக்கும் குளுக்கோசின் அளவைக் குறிப்பதுவாகும்.
மனித உடலானது இதனைப் பொதுவாக 3.6 - 5.8 மில்லி லீட்டர் அளவில் பேணுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
ரத்தத்தில் சக்கரை அதிகமாகும் நேரத்தில் உடலில் நீரழிவு நோய் உண்டாகும். இந்த நோயால் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகம், நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
இந்த நோய் தெற்றாத நோயாக இருந்தாலும் இது உடலில் வந்து விட்டால் நமது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும். எனவே இந்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் மூலிகைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலிகைகள்
முத்லில் பார்க்கபோவது வெந்தயம் தான் இதில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன. இதனால் உடல்சூட்டை தணிக்கக்கூடியது. சிறுநீரையும் பெருக்கக்கூடியது.
இதை தவிர இதில் வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் செரிமானத்தை மெதுவாக்க உதவும் நார்ச்சத்து மற்றும் வேறு இரசாயனங்கள் உள்ளன.
அடுத்து இலவங்கப்பட்டை இது கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள் மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. நறுமணத்திற்காக பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இது மூலிகையாகவும் பயன்படுகிறது.
இன்சுலின் தடுப்பு மற்றும் வகை 2 சக்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் இலவங்கப்பட்டைக்கு நல்ல மருந்தியல் தாக்கங்கள் இருப்பதாகக் ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் சுரப்பை ஆர்வப்படுத்த மூடிய கிலோய் இது கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, இதயம், கொழுப்புச்சத்து போன்றவை தொடர்பான மருத்துவ உயிர்வேதியியல் விவரங்களும் சோதிக்கின்றன.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் மூலிகையாகக் கருதப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அடாப்டோஜெனிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இது உடல் மன அழுத்தத்திற்கு ஏற்ப மற்றும் ஹோமியோஸ்டாசிஸை பராமரிக்க உதவும். இத்தனை நன்மை கொண்ட கிலோயில் ரத்ததில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனும் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |