ஐந்தே நிமிடங்களில் சூப்பரான பாண் கொத்து!
Garlic
Ginger
Green Chilli
Tomato
Healthy Food Recipes
By Kirthiga
பாண் என்றாலே இனிப்புடன் தான் சாப்பிட வேண்டம் என்று சிறியவர்கள் நினைப்பார்கள். ஆனால் பாணை கறி வைத்து சாப்பிடுவது வழக்கம். அதிலும் பாணும் பருப்பு கறி என்பதற்கு பலரின் நாக்கு அடிமை.
ஒரே மாதிரி பாணை உண்ணாமல் சற்று வித்தியாசமாக உண்ண இந்த முறையை பயன்னடுத்தி பாருங்கள். பாணை சென்ட்விட்ச் செய்து மட்டும் சாப்பிட பயன்படுத்தாமல் மிகுதியான பாணில் எவ்வாறு சூப்பரான பாண் கொத்து செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாண் (தேவையான அளவு)
- பட்டர்
- 1-வெங்காயம்
-
1 1/2 தக்காளி
- 3 பச்சை மிளகாய் அல்லது 1 குடைமிளகாய்
-
½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு அறைத்தது
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு (தேவைக்கேற்ப )
- முட்டை (விருப்பமெனில்)
செய்முறை
- பாணை சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பின் ஒரு சட்டியில் தேவையான அளவு பட்டரை போட்டு கொள்ளுங்கள்.
அதனை குறைந்த தீயிலேயே வதக்கிக்கொள்ளுங்கள்.
-
அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- அதே கடாயில் 1 மேசைக்கரண்டி பட்டர் மற்றும் எண்ணெய் சிறிதளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
1 வெங்காயத்தை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை அந்த கடரயில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
-
1 ½ தக்காளியை சிறிதாக வெட்டி எடுத்து அதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
3 பச்சை மிளகாய் அல்லது 1 குடைமிளகாயினை நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பச்சை மணம் போகும் வரை வதக்கிகொள்ளுங்கள்.
- ½ மேசைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளுங்கள்.
- பின் முட்டை விருப்பமெனில் சேர்த்துக்கொள்ளுங்கள்.அல்லது முட்டை சேர்க்க விரும்பவில்லை எனில் தக்காளி பேஸ்ட் மட்டும் சிறிது சேர்த்து கொள்ளலாம்.
- அத்தோடு 1 தேக்கரண்டி மிளகாய் பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அடுப்பு தீயினை குறைத்துவிட்டு பாணை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்து முடித்தால் சவையான பாண் கொத்து தயார்!
குறிப்பு: ஒருவர் சாப்பிடும் அளவு என்றால் 4 அல்லது 5 பாண்கள் எடுத்துக்கொள்ளலாம்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US