கில்லி விஜய்யின் நண்பர் ஆதிவாதி கொரோனாவால் மரணம்! பேரதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்
விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு நண்பராக நடித்த மாறன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
அவர் இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் நடிகர் மரணம், நடிகை மரணம், தயாரிப்பாளர் மரணம் என்று தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மரண செய்தி வந்திருக்கிறது.
விஜய்யின் கில்லி படத்தில் ஆதிவாசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாறன்.
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த மாறனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
மாறன் இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.