வெளிநாட்டில் சுற்றித்திரியும் 96 பட நடிகை... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
96 பட நடிகை கெளரி கிஷன் மலேசியா சென்று முருகனை தரிசனம் செய்து தற்போது தனது சமூக வலைத்தள பத்தத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை கௌரி கிஷன்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கௌரி கிஷன்.
கௌரி 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது இந்த படத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. அவர் 96 இன் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் ஜானுவாக மீண்டும் நடித்தார், இதனால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். அதன் பின்னர் மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சிறந்த கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடித்த இவருக்கு குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அண்மை காலமாக கிளாமரில் வெளுத்து வாங்கி வருகின்றார். சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் கௌரி கிஷன் மலேசியா சென்று Batu Caves முருகனை தரிசனம் செய்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
