ஆளே அடையாளம் தெரியாமல் போன நடிகை சிவரஞ்சனி... இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை சிவரஞ்சனி
தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி.
சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல மேடைகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
1991ம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவரது வசீகர கண்ணுக்கு பலரும் அடிமை என்றே கூறலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். பின்னர் 1999 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்தை காதலித்து கரம்பிடித்தார்.
இதன் பின்னர் ஆந்திராவிலேயே செட்டில் ஆகியுள்ள சிவரஞ்சனிக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் வாரிசு படத்தில் நடிகர் விஜயின் அண்ணனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தைில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |