அவசர பசியா? 5 நிமிடத்தில் ருசியான பிரட் உப்புமா செய்வது எப்படி?
தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்களுக்கு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள்.
இந்த பிரட் உப்புமாவிற்கு எந்த வகையான பிரட்டையும் பயன்படுத்தலாம். மேலும் இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் எளிமையாபன செய்முறையைக் கொண்டது.
அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது, காலை உணவாக இந்த ரெசிபியை செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம்.
இதை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் பசிக்கும் போது செய்து சாப்பிடலாம். பிரட் வைத்து எளிய செய்முறையில் உப்புமா செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையானப் பொருள்கள்
பிரட் துண்டு - 5
பெரிய வெங்காயம் - 1 சாதாரண அளவு
பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2
டீஸ்பூன் முந்திரி - 10
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டு பொறியவிட வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
நன்றாக வதங்கிய பின்னர் பிரட் துண்டுகளைப் அதில் சேர்த்து கொஞ்சம் மிதமான தீயில் கிளறிவிட வேண்டும்.
இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பிரட் உப்புமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |