சமூக வலைத்தளங்களில் 2கே கிட்ஸின் அலப்பறைகளும், 90ஸ் கிட்ஸின் காத்திருப்பும்! (காணொளி)
சமூக வலைத்தளங்களில் நாட்டிற்காக அடித்து கொள்வார்களோ தெரியவில்லை.
ஆனால் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸ் என அடிக்கடி அடித்து கொள்வார்கள்.
புதிய புதிய மீம்ஸ்களையும் வீடியோக்களையும் உருவாக்கி இரு தரப்பினர்களையும் மாறி மாறி கலாய்த்து கொள்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர்கள் மத்தியில் குளத்தில் கள்ள போட்டு பிரபலமானவர்கள் தான் நம்ம 90ஸ் கிட்ஸ்.
இவர்களின் போராட்டங்கள் எப்போது முடிவடையும் என 80ஸ் கிட்ஸ் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இருக்கும் இளைஞர்கள் தவறுகளை அடுக்கி விட்டு “நாங்க எல்லாம் 2 கே கிட்ஸ் பா..” என திரையை போட்டு மறைந்து கொள்கிறார்கள்.
மேலும் 2 கே கிட்ஸாக இருக்கும் இளைஞர்கள் வாலிபர்களாக இருக்கும் போதே ஒரு 30 வயதிற்கு பின்னால் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து விடுவார்கள்.
இது போன்ற பல சுவாரஸ்யமான வேறுபாடுகளை கீழுள்ள காணொளியில் சிறிய புன்னகையுடன் பார்த்து மகிழுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |