வயிற்றில் 3 குட்டிகளோடு கர்ப்பிணிப் புலி உயிரிழந்தது
வயிற்றில் 3 குட்டிகளோடு கர்ப்பிணிப் புலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிப் புலி உயிரிழந்தது
ராஜஸ்தானில் உள்ள முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் காப்பகத்தில் (எம்எச்டிஆர்) 9 வயது நிறைமாத கர்ப்பிணிப் புலியான ‘எம்டி-4’ நேற்று உயிரிழந்தது. இந்த கர்ப்பிணி புலி வயிற்றில் 3 குட்டிகளுடன் கர்ப்பமாக இருந்தது. கடந்த சில நாட்களாக கடுமையான மலச்சிக்கலால் கர்ப்பிணி புலி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று கர்ப்பிணி புலி உயிரிழந்தது.
இதனையடுத்து, வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், புலி நிறைமாத கர்ப்பிணியாக 3 குட்டிகள் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கர்ப்பமான புலி முதன்முதலில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தது.
ரணதம்பூர் மற்றும் கோட்டாவைச் சேர்ந்த கால்நடை நிபுணர்கள் குழு ஏப்ரல் 30ம் தேதி அன்று புலியை முழுவதுமாக பரிசோதனை செய்தனர். அப்போது, புலியின் பெருங்குடல் மூலம் மலத்தை வெளியிட முடியாமல் திணறியது.
கடந்த மே 1ம் தேதி, கர்ப்பிணிப் புலிக்கு எனிமா சிகிச்சை அளிக்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த புதன் கிழமை புலிக்கு மலக்குடல் சரிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புலி குணமடைந்து வந்த நிலையில், நேற்று மதியம் கர்ப்பிணி புலி திடீரென இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.