தள்ளாடும் வயதில் முதியவருக்கு நடந்த கொடுமை.. லண்டனில் வசிக்கும் மகள்- வைரலாகும் காணொளி!
லண்டன் சென்றதும் தந்தையை மறந்த பாசக்கார மகளின் கதை சமூக வலைத்தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
80 வயதில் நடக்கும் கொடுமை
"பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என முன்னோர்களின் கருத்திற்கேற்ப நமது சமூகத்தில் ஏகப்பட்ட விடயங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது இருக்கும் இளைஞர்கள் ஒரு வயது வந்த பின்னர் பெற்றோர்களை கணக்கெடுக்கமாட்டார்கள். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் நிலவி வரும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.
அப்படியொரு சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், இந்தியா- சென்னையில் உள்ள லோக்கல் ரயில் நிலையத்தில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் போளி வியாபாரம் செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதில் முதியவருக்கு ஏற்பட்ட சோகம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வயதான காலத்தில் தன்னையும் தன்னுடைய மனைவியையும் பராமரித்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் வியாபாரம் செய்து கொண்டு வருகிறார்.
இவரது மகள் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மகள் தன்னை பார்த்துக் கொள்வார் என காத்திருந்த தாயாருக்கும் 70 வயதில் இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இணையவாசியின் ஆதங்கம்
இந்த போளியை அவ்வழியில் சென்ற இணையவாசிகளில் ஒருவர் சுவைத்த பின்னர் அவருடைய சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் முதியவர் செய்த போளியை சுவைத்தேன். அவர்களிடம் அன்பு, தெய்வீகம் மனம் இருந்தது. சில சமயங்களில் நல்ல உணவுகளுக்கு பின்னர் வலியுடன் கூடிய ஒரு கதையும் இருக்கும். இவர்களின் துயரம் இனியும் வேண்டாம்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளியை ஏறத்தாழ 33 ஆயிரம் பயனர்கள் லைக் செய்துள்ளதுடன், 900க்கும் அதிகமானோர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதில், “ நாங்கள் அந்த முதியவருக்கு உதவ வேண்டும்..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Polis, Sweets & Tears behind every bite ❤️ 😭 “Today, my heart broke when I saw an 80-year-old got pushed into hardship. Abandoned by his own daughter who now lives in London, he has taken up selling sweets and polis on the busy trains of Chennai, to support himself and his… pic.twitter.com/6wpuOzpwwk
— Dr Mouth Matters (@GanKanchi) September 9, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |