Viral Video: 70 வயது காதலிக்கு தாலி கட்டிய 75 வயது காதலன்
”காதல்” என்ற ஆழமான அன்பின் பிணைப்பில் வயது வித்தியாசம் ஏது?
யாருக்கும் எந்த வயதிலும் காதல் வரலாம், இளமை- முதுமை என்ற வேறுபாடுகள் கிடையாது.
தன்னுடைய தனிமையை போக்க, தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணை கிடைத்துவிட்டாலே போதும், அப்படியொரு அழகான உறவுக்கு ஈடுஇணை ஏதும் உண்டா?
இதை நிரூபிக்கும்விதமாக சமீபத்தில் வீடியோவொன்று வைரலாகி வருகிறது.
அதில் 75 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிகட்டுகிறார்.
இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது.
ந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள முதியோர் காப்பகத்தில் Baburao Patil மற்றும் Anusuya Shinde இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த காதலாக மலர்ந்தது, இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இதற்கு அனைவருமே சம்மதம் தெரிவிக்க கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக, பலரும் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ओल्ड एज होम में हुआ प्यार, 75 साल के बुजुर्ग ने 70 साल की बुजुर्ग गर्लफ्रेंड से की शादी
— Vivek Gupta (@imvivekgupta) February 27, 2023
महाराष्ट्र का कोल्हापुर में एक ओल्ड एज होम एक 75 साल से बुजुर्ग को 70 साल की बुजुर्ग महिला से प्यार हो गया.
दोनो ने पूरे रीती रिवाज के साथ शादी की. pic.twitter.com/q7M75ERzu2