2 தடுப்பூசி போட்டாலும் பாதிப்பு; இந்த 7அறிகுறிகள் இருந்தால் ஓமிக்ரோன் பாதிப்பா?
கொரோனா வைரஸ் ஒரு பக்கம பரவி வரும் நிலையில் மறுபக்கம் ஓமிக்ரோன் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
பலரும் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், புதிய வகைகளின் அறிகுறிகள் நுட்பமாக வளர்ந்துள்ளன. எனவே 2 தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம்.
இருமல்
முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு இருமல் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு அளாகியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மூக்கு ஒழுகுதல்
மூச்சுத்திணறல் அல்லது மூக்கு ஒழுகுதல் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். மேலும் இது பெரும்பாலும் காய்ச்சலுடன் வருகிறது.
மூக்கடைப்பு, தலைவலி, சோர்வு , சளி போன்ற நிலைமைகளைக் கொண்டிருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கோவிட் இன் ஓமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
உடல் நிலை சோர்வு
தொற்று அதிகப்படியானால் உடல் நிலை சோம்பலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சளி, இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
தொண்டை புண்
மாறிவரும் காலநிலையுடன் தொண்டை வலியை குழப்பிக்கொள்கின்றனர். இது ஓமிக்ரோன் மாறுபாட்டின் நான்காவது பொதுவான அறிகுறியாகவும் இருப்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
தலைவலி
தலைவலி பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால் இது ஓமிக்ரோனின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.
தசை வலி
தசை வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் அது கோவிட்-19 இன் அறிகுறியாகவும் இருக்கலாம். COVID-19 சோதனையில் பாசிடிவ் ரிசல்ட் வந்தவர்களில் 58% பேர், இந்த அறிகுறியை கூறியுள்ளனர்.
காய்ச்சல்
குளிர் மற்றும் காய்ச்சல் இருப்பது புதிய மாறுபாட்டின் மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.