மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
பொதுவாக, உணவுகளை புதிதாக சமைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு சிறந்தது.
ஆனால், சில உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அந்தவகையில், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
பிரியாணி- பிரியாணியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கீரைகள்- கீரைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், சமைத்த கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது உணவின் தரத்தை பாதிக்கும்.
முட்டை- முட்டையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. ஆனால், முட்டையை வைத்து தயாரித்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
உருளைக்கிழங்கு- உருளைக்கிழங்கை வைத்து சமைத்த உணவை நீண்ட நேரம் வைத்திருந்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கோழி இறைச்சி- கோழி இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதாலும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
காளான்- காளானில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், காளான் உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.
பீட்ரூட்- பீட்ரூட்டில் இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், பீட்ரூட்டை வைத்து தயாரித்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.