68 வயதில் ரூ.44 லட்சம் சம்பாதித்த கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி தெரியுமா?
எடி ரிச் என்பவர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக 1995ம் ஆண்டு நடிக்க ஒப்பு கொண்டு தற்போது வரை பரம்பரையாக சத்பாதித்து வருகிறார்.
எடி ரிச்
1995ம் ஆண்டு, எடி ரிச் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆசைக்கு இணங்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். இது அன்று விடுமுறை நாட்களில் தற்செயலாக செய்த ஒரு செயலாகும்.
இது இப்போது அதிகமான பணத்தை சம்பாதிக்க உதவுகிறது. தற்போது கிறிஸ்துமஸ் காலத்தில் வாரத்திற்கு $14,700 வரை சம்பாதிக்கிறார். இவர் இப்போது ஆன்லைன் உலகில் பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தாவாக வலம் வருகிறார்.
32 வயது நிரம்பியுள்ள இவரது மகன் கிறிஸ், விழாக்கால கோரிக்கைகள், ஸ்கிரிப்ட் மற்றும் வீடியோ எடிட் போன்ற திரைக்குப் பின்னால் உள்ள வேலைகளை நிர்வகித்து வருகிறார்.
இப்படி கடந்த ஆண்டு, இவர்கள் இருவரும் சேர்ந்து $52,000 (தோராயமாக ரூ.44 லட்சம்) தொகையை திரட்டி உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
எடி என்பவர் வழக்கமாக ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போனை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 20 வீடியோக்களை பதிவு செய்வார்.
இதில் 25% எடிட் செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்காகவும் பிரத்யேகமாக அவர் உருவாக்கும் ஒவ்வொரு செய்தியும் அவருக்கு சுமார் $525 பணத்தை பெற்று தருகிறது. எடி இந்த வேலையை ஒரு பகுதி நேர வேலையாக செய்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |