23 ஆண்டுகளாக நிற்காமல் ஒலிக்கும் இசை.. பல நூற்றாண்டுகளாக தொடரவுள்ள இசைப்பயணம் - சுவாரஸ்ய தகவல்கள்
தொடர்ந்து 639 ஆண்டுகள் ஒலிக்கும் வகையில் இசையொன்று இயற்றப்பட்டுள்ளது.
இசை கண்டுபிடிப்பு
இந்த இசை கடந்த 2001 முதல் 2640 வரை இசைக்கும் என பதிவுகளில் கூறப்படுகிறது.
சுமாராக 23 ஆண்டுகளை கடந்தும் இன்று இசை இசைத்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
நாம் கேட்டு, பார்த்து வியந்து போகும் பல கண்டுபிடிப்புக்கள் எமக்கு தெரியாமல் உலகில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. “முடிந்தவரை மெதுவாக” என பெயரிடப்பட்ட இந்த இசையை பிரபல அமெரிக்க இசைக் கலைஞர் “ஜான் கேஜ்” என்பவர் கடந்த 1987 ஆம் ஆண்டு இயற்றியுள்ளார்.
பார்ப்பதற்கு பியானோவை போன்று காணப்படும் இந்த கருவியில் சில குழாய்கள் இருக்கின்றன.
இதில் காற்று வீசும் பொழுது இசையை உருவாக்குகிறது. 1985 ஆம் உருவாக்கப்பட்ட இந்த இசையானது 1987 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. முதலில் 30 நிமிடங்கள் வரை தான் இசை நீடித்தது.
மீளுருவாக்கத்தின் வெளிபாடு
இதனை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு ஜான் கேஜ் இறந்து விட்டார். இவர் இறந்த பின்னர் ஜான் கேஜ் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 639 ஆண்டுகள் நிற்காமல் தொடர்ந்து இசைக்கும் வகையில் இந்த இசையை உருவாக்கியுள்ளனர்.
இதன்படி, கடந்த 2001, செப்டம்பர் 5ஆம் திகதி மரச்சட்டத்தால் இசைக்கருவி உருவாக்கப்படுகிறது.
இந்த கருவியில் இசை மாறுவது போன்று தோன்றினால், பழைய குழாய்கள் கழிக்கப்பட்டு, புதிய குழாய்கள் சேர்க்கப்படுகின்றன.
மேலும், இந்த இசைக்கருவி காற்றை வழங்கும் மின்சாரத்தால் இயக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் இல்லாத வேளைகளில் ஜெனரேட்டர் மூலம் இயங்கும். கருவியிலிருந்து வெளியேறும் காற்றின் மூலம் தொடர்ந்து இசை ஒலித்து கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |