சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டாரா 62 வயது முதியவர்? உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக 62 வயது முதியவர் ஒருவர் தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக வீடியோவொன்று வைரலாகி வருகிறது.
சமீபகாலமாகவே இணையத்தில் வெளியாகும் வீடியோக்களையும், வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளையும் உண்மை என நம்பி பலரும் விபரீதத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுதொடர்பான செய்திகளையும் நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம், அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் 62 வயதான பண்டிட் ஒருவர் தன் சொந்த மகளை திருமணம் செய்து கொண்டதாக இருவரும் மாலையும், கழுத்துமாக இருக்கும் வீடியோ வைரலானது.
இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி இப்படி செய்து கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பலரும் உண்மை என நம்பி இந்த வீடியோவை பகிர காட்டுத்தீப்போல் பரவியது, ஆனால் இது பொய்யானது என தெரியவந்துள்ளது.
Troll என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதியும், Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
62 year old pandit married her own daughter , he said that he is following his god brahma and who had married her daughter.@Maverickism_ @faizan0008 @Shayarcasm @DunkinDonut58 @Delhiite_ @MogalAadil @jokerrr2_0 pic.twitter.com/jGmCYZ3HDw
— Troll (@TrollHoon) December 25, 2022
இதனை சோதித்து பார்த்ததில், Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோன்று, மூதாட்டியை இளைஞர் திருமணம் செய்வது போன்றும் வீடியோக்கள் உள்ளன.
எனவே இந்த சம்பவமும் திட்டமிட்டு பகிரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, இதன்மூலம் போலியானது என்பதும், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.