6000 குடியிருப்புக்கள் ஒரே தெருவில்...உங்களால் நம்ப முடிகின்றதா?
நமக்கே தெரியாத நம்மை இப்படியும் இருக்கிறதா என்று வாய் பிளக்க வைக்கும் பல விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.
பொதுவாக கிராமப்புறங்களில் அடுத்தடுத்த வீடுகள் இருப்பது சர்வ சாதாரணமான ஒன்று. ஏனென்றால் அங்கு பரந்த நிலப்பரப்பு காணப்படும்.
image - Depositphotos
ஆனால், போலந்தில் உள்ள நகரம் ஒன்று நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், இங்கு 6000 குடியிருப்பாளர்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இதை உங்களால் நம்ப முடிகின்றதா?
இங்கு இருபுறமும் பசுமையான ஒரு அமைப்பு காணப்படுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வீடுகள் காணப்படுகின்றன. இந்த இடமானது, சுலோசோவா தெற்கு போலத்தின் கிராகோ கவுண்டியில் அமைந்துள்ளது.
அதன் அமைப்பின் காரணமாக இதை 'லிட்டில் டஸ்கனி' என்று அழைத்தார்கள்.
image - Vietnam posts english
கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த இடத்தின் மக்கள் தொகை 5,819 ஆக இருந்த நிலையில், 2013ஆம் ஆண்டில் 19 பேர் அதிகரித்துள்ளனர்.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக, கல்விக்காகவும் தொழில் தேடியும் சிலர் கிராமத்தை விட்டு வெளியேறியதால் மக்கள் தொகை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இது 6 ஆம் நூற்றாண்டில் ஒரு உயர்குடி இராணுவ அதிகாரியால் நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருந்த போதிலும் பலருக்கும் இதைப் பற்றி தெரியாத காரணத்தினால், இதன் வான்வழிப் புகைப்படம் ஒன்று வைரலானதில் பலரும் இதைப் பற்ற அறிந்துகொண்டும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள்.
image - MSN