60 கிலோவா? வீட்டிற்குள் புகுந்த ராட்சத மலைப் பாம்பு! பீதியை கிளப்பிய சம்பவம்
திரைப்பட காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மலேசியாவில் வீடு ஒன்றில் மலைப்பாம்பு புகுந்துள்ள சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பீதியை கிளப்பி வருகின்றது.
குறித்த வீட்டில் உள்ள சிறுமி பள்ளி முடிந்து வந்த போது, தனது அறையில் உள்ள கழிப்பறையில் மிகப்பெரிய பாம்பு இருப்பதை பாத்து சத்தமிட்டுள்ளார்.

அதனையடுத்து குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, கழிவறையின் சீலிங்கில் சுமார் 60 கிலோ எடையுடைய ராட்சத மலைப்பாம்பொன்று பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
அதை பார்த்ததும் குடும்பத்தினர் உடனடியாக பாம்பு பிடிக்கும் குழுவுக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பாம்பை பிடித்ததுள்ளனர்.

குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பெரும்பாலானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |