6 வயதில் சொந்தமாக வீடு வாங்கிய சிறுமி: அதுவும் எத்தனை கோடிகள் தெரியுமா?
இன்றைய காலத்தில் சொந்தமாக வீடு வேண்டும் என்பதற்காகவே உழைக்கும் மக்கள் ஏராளம், சொந்த வீடு என்பதே பலரது கனவாகவும் இருக்கிறது.
ஆனால் வெறும் 6 வயதில் சிறுமி ஒருத்தி சொந்தமாக வீடு வாங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேம் மெக்லெலன், வீடுகள் விற்றுக்கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார், இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர்.
சிறுவயது முதலே குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்துள்ளார் கேம் மெக்லெலன், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறிவருவாராம்.
மேலும் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து முடித்தால் குழந்தைகளுக்கு பணமும் கொடுத்துள்ளார், இதனால் பிள்ளைகளும் ஆர்வத்துடன் வீட்டு வேலைகளை செய்து பணம் ஈட்டியுள்ளனர்.
மூவரும் இலங்கை மதிப்பின்படி 1 கோடி ரூபாய் வரை சேர்த்துள்ளனர், இதனுடன் வீடு வாங்க தேவைப்படும் மீதி தொகையை செலுத்தி வீடு ஒன்று குழந்தைகளின் பெயரில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இன்னும் சில வருடங்களில் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வீட்டின் மதிப்பு உயரும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கேம் மெக்லெலன்.