நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!
பிரபல நடிகையும், முன்னாள் எம்பியுமான நடிகை ஜெயபிரதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தியேட்டர் ஊழியர் ஒருவர் தொடர்ந்த இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை தீர்த்து வைப்பதாக ஜெயப்பிரதா உறுதியளித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், ஜெயப்பிரதாவின் விண்ணப்பத்தை தொழிலாளர் துறை எதிர்த்ததால், ஜெயப்பிரதா மற்றும் இரண்டு குற்றவாளிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் , 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பிரபலமான நடிகையானா ஜெயப்பிரதா 1994 இல் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஜெயப்பிரதா 1996 இல் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினரானார். மேலும் ஜெயப்பிரதா 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.