இவரின் வயது 55 என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
சிங்கப்பூரை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் புகைப்பட கலைஞரான சுவாண்டோ டான்(Chuando Tan) 55 வயது 20 வயது கட்டிடம் இளைஞனாக தோற்றம் அளிக்கின்றார்.
1967 ஆம் ஆண்டு பிறந்த சுவான்டோ தனது உடல் தோற்றத்தை 20 வயது இளைஞனை போன்று பேணி பராமரித்து வருகின்றமை ஆச்சரியமைக்கின்றது.
1980 களில் சுவான்டோ ஓர் மாடலாக செயல்பட்டு வந்தார், பின்னர் 90களில் பப் இசைக் கலைஞராக பணியாற்றினார், அதன் பின்னர் தனது இசைத்துறை பயணத்தை இடைநிறுத்திக் கொண்டு புகைப்பட கலையை தெரிந்தெடுத்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சீன செய்தி முகவர் நிறுவனம் ஒன்று தொடர்பில் ஒரு விவரணத்தை வெளியிட்டிருந்தது.
முதல்முறையாக அவர் உலகிற்கு அறிமுகமாகிய சந்தர்ப்பம் அதுவாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு ப்ரீசியஸ் இந்த நைட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சுவாண்டோவின் instagram கணக்கினை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இதுவரையில் அவர் 626 இன்ஸ்டா பதிவுகளை இட்டுள்ளார். தனது இந்த இளமை தோற்றத்திற்கு 70% உணவு பழக்கமும் 30% உடற்பயிற்சியும் பங்களிப்பதாக சுவாண்டோ தெரிவிக்கின்றார்.
தனது காலை உணவாக ஆறு அவித்த முட்டைகளை உட்கொள்கின்றார், அதில் இரண்டு முட்டைகளில் மட்டுமே மஞ்சள் கருவினை உட்கொள்கின்றார்.
கொலஸ்ட்ரால் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு மஞ்சள் கருவினை அதிக அளவு உட்கொள்வது தவிர்த்துக் கொள்கிறார்.
காலையில் ஒரு கோப்பை பால் உட்கொள்கின்றார் சில சமயங்களில் பாலுடன் அவகாடோ மற்றும் பெர்ரி வகைகளை சேர்த்துக்கொண்டு உட்கொள்கின்றார்.
இந்த உணவு வகைகள் கூடிய அளவு புரதச் சத்தினையும் உடலுக்கு தேவையான சக்தியையும் உடலுக்கு வழங்குகின்றது.
முட்டைக்கு மேலதிகமாக கோழி இறைச்சியும் சோறும் உட்கொள்கின்றார். மேலும் கிரில் செய்யப்பட்ட மரக்கறி வகைகள், மீன் சூப் போன்றவற்றையும் அவர் பகல் உணவாக உட்கொள்கின்றார்.
தனது ஒரு பலவீனமாக ஐஸ்கிரீம் உட்கொள்வதனை அவர் குறிப்பிடுகின்றார். எனினும் அவர் பகல் வேளையின் பின்னர் ஐஸ்கிரீம் உட்கொள்வதில்லை என குறிப்பிடுகின்றார்.
கோபி மற்றும் தேநீர் பானங்கள் உட்கொள்வதை முற்றாக தவிர்த்துக் கொள்வதாகவும் முடிந்த அளவு நீர் பருகுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புகை பிடித்தல் மதுபானம் அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தம்மிடம் இல்லை என குறிப்பிடும் சுவாண்டோ, இரவு உணவாக பச்சை சாலட் வகைகளை உட்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
55 வயதில் இருபது வயது இளைஞனாக தோற்றமளிப்பதற்கான இரகசியங்களாக சுவாண்டோ இந்த விடயங்களையே பகிர்ந்து கொண்டுள்ளார்.