சூரியனை விட 500 மடங்கு பிரகாசமான கருந்துளை: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
பிரபஞ்சத்தில் இதுவரை காணப்படாத பிரகாசமான கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஏதேனும் ஆபத்து வருமா? என்பததை இந்த பதிவில் பார்க்க முடியும்.
கருந்துளை
ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தில் இதுவரை காணப்படாத பிரகாசமான கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது இதுவரை யாரும் கண்டிராத அளவிற்கு பிரகாசமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த துளை குவாசர் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் மையங்களில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகளால் இயக்கப்படுகின்றன.
இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசி விழுவதால், அவை மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதுடன் தீவிர ஒளியை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளதுடன், வேகமாக வளர்ந்து வருகிறது.
இது விண்மீன் மண்டலத்தில் உள்ள பிரகாசமான குவாசர்களின் சிறப்பியல்பு என கூறப்படுகிறது. இந்த துளை சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர இது “பிரபஞ்சத்தின் மிகவும் நரகமான இடம்” என்று முன்னணி ஆராய்ச்சியாளர் தெரிவித்தார் . இந்த கடுமையான நிலைமைகளிலும், இந்த குவாசர் வெளியிடும் ஒளி அசாதாரணமானது என குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.இது 17 பில்லியன் சூரியன்களுக்கு சமமானது. மேலும், ஒரு நாளைக்கு ஒரு சூரியன் அளவுக்கு வளர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த குவாசர் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியில் உள்ள பார்வையாளர்களுக்கு, குவாசர்கள் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும்.இந்த ஒளி அனைத்தும் ஏழு ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட ஒரு சூடான அக்ரிஷன் வட்டில் இருந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |