தாயான பின்னர் திருமணம் செய்து கொண்ட ஐ பட நடிகை- மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்திய நடிகையான எமி ஜாக்சன் நடிகர் எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எமி ஜாக்சன்
தமிழில் 2010ஆம் ஆண்டில் வெளியான “மதராசப்பட்டினம் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு இடைப்பட்ட தீவான Isle of Manயில் பிறந்த எமி ஜாக்சன், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் George Panayiotou என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். ஆனாலும் அந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரிந்தது.
மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை (எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எட் வெஸ்ட்விக் கடந்த 2006ஆம் ஆண்டில் வெளியான Children of Men என்ற படம் மூலம் அறிமுகமானார்.
இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து 4 விருதுகளை வென்றுள்ளாராம்.
திருமண புகைப்படங்களை எமி ஜாக்சன் அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார்.
புகைப்படத்தை பார்த்த பலர் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |