5 பெண்களை பெற்றால் ஆண்டியா? பொய்யாக்கிய சகோதரரிகள்: புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி என்ற பழமொழியினை சாதனையாக மாற்றியுள்ளனர் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள்.
ஐந்து பெண்களை பெற்றால், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதற்குள் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் பெற்றோர் விற்று தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என்பதற்காக இந்த பழமொழி முன்னோர்கள் கூறப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த நவீன காலத்தில் அதனை தகர்த்து சாதனைப் படைத்துள்ளனர் ஐந்து சகோதரிகள்.
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ சகாதேவ் சகரன். ஏழை விவசாயி. இவருக்கு 5 பெண் பிள்ளைகள். நிலத்தில் உழைத்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது 5 பெண்குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார்.
தந்தையின் கஷ்டத்தினை அறிந்த 5 பெண்களும் மிகவும் நன்றாக படித்து இன்று பலரும் வியக்கும் வண்ணம் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
முதல் 2 பெண்களான ரோமா, மஞ்சு ஆகியோர் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று, அம்மாநிலத்தின் உயர் பதவிகளுக்கு சென்றனர். இவர்களின் அடுத்த மூன்று சகோதரிகளான அன்சு, ரீத்து, சுமன் ஆகியோர் கடந்த 2018ல் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வு முடிவை ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், அன்சு, ரீத்து, சுமன் ஆகிய 3 பேரும் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையை 5 சகோதரிகளும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கொண்டாடி வருவதோடு, லைக்ஸையும் குவித்து வருகின்றனர்.
