மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் 5 காய்கறிகள்.., என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
இதய தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் திடீரெனத் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது.
அந்தவகையில், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் 5 காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தக்காளி
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதனால் இதய நோய் அபாயம் குறையலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் நிறைந்துள்ள நைட்ரேட்டுகள் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. வெங்காயம்- வெங்காயத்தில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவக்கூடும்.

கேரட்
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

கீரைகள்
அகத்திக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட கீரைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
