காலையில் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க... ஆபத்தை ஏற்படுத்துமாம்
Kidney Disease
Constipation
By Kishanthini
பொதுவாக காலை உணவு என்பது அனைவருக்குமே முக்கியமானதாகும்.
நாள் முழுவது புத்துணர்ச்சியுடன், ஆற்றலுடன் இருக்க காலை உணவு மிகவும் அவசியம் .
இருப்பினும் இந்த அவசர உலகில் பலர் வெறும் வயிற்றில் கண்ட கண்ட உணவை உட்கொள்ளுகின்றனர்.
இது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

image - thedailymeal
- நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சீரான, சரியான அளவில் உண்ணுங்கள்.
- காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.
-
காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிடவே கூடாது. அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.
- காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.
- ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US