100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான்
அட்சய திருதியை இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அட்சய என்றால் குறைவில்லாத என்று பொருள்.இந்த நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது பன்மடங்கு பெருக்கத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.
அதனால் தான் அட்சய திருதியையில் தங்கம் வாங்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க சிறந்த நேரம் என்றால் அது ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 10:49 மணி முதல், ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 05:51 மணி வரை ஆகும்.

அதுவும் இந்நாளில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி, பித்தனை, புதிய நிலம், வீடு, வாகனம் என எந்த பொருட்களை வாங்கினாலும் அது குறைவில்லாமல் பெருகிக்கொண்டே இருக்கும்.
மேலும் இந்த நாளில் ஆரம்பிக்கும் புதிய வேலைகள் சிறப்பான முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுக்கும். இந்த ஆண்டு அட்சய திருதியையை மேலும் மங்களகரமாக மாற்றும் வகையில், 100 ஆண்டுகளின் பின் 5 அரிய ராஜ யோகங்களும் உருவாகின்றது.

அப்படி அட்சய திருதியையில் உருவாகும் அரிய ராஜ யோகங்கள் குறித்தும் அதனால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜ யோகங்கள்
கஜகேசரி யோகம்: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகத்தால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். நிதி நிலையில் பாரியளவில் ஏற்றத்தை கொடுக்கும்.
திரிபுஷ்கர யோகா: இந்த யோக காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் மூன்று மடங்கு பன் மடங்கு லாபமத்தையும் வெற்றிகளையும் கொடுக்கும்.
சர்வார்த்த சித்தி யோகம்: முதன்மைக் கடவுளான விநாயகருடன் தொடர்புடைய இந்த யோக காலத்தில் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும், அது தடையின்றி நடைபெறும். இது மிகவும் மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகின்றது.
சச மற்றும் மாளவ்ய ராஜயோகம்: சனி மற்றும் சுக்கிரனால் உருவாகும் இந்த ராஜ யோகங்களால், தொழில் மற்றும் நிதி நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.
ரவி யோகம்: நல்ல ஆரோக்கியத்தையும், சமூகத்தில் மதிப்பு மரியாதையையும் இந்த யோகம் உயர்த்தும்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்கள்
இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் 5 ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
மேஷம், ரிஷபம், சிம்மம், கும்பம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் இந்நாளில் முதலீடுகளை செய்தால், எதிர்காலத்தில் உச்சகட்ட பலன்களை பெற முடியும். குறித்த யோகங்களால் இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகின்றது.
இந்த ராசியினரின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது. இவர்கள் அட்சய திருதியையில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வாங்குவதால் பெரும் அதிர்ஷ்ட யோகத்தை பெற வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |