2நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட பலன்?
குரு பகவான், புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைகிறார். இது நான்கு ராசிகளுக்கு பொன்னான காலத்தை கொடுக்கப்போகின்றது.

குரு நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றார். இவர் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிரவேசிக்கின்றார்.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் திகதி திங்கட்கிழமை அன்று, அதிகாலை 04:43 மணிக்கு, குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் பெயர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் குருவின் சஞ்சாரம் மே 14-ஆம் தேதி வரை தொடரும். புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு அதிபதி சுக்கிரன் ஆவார்.
இந்த நட்சத்திர பெயர்ச்சி மூலம் சில ராசிகள் நற்பலனை அடையப்போகின்றது. அந்த ராசிகள் aார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு நற்பலனை அள்ளி கொடுக்கும். உங்கள் தொழில் வாழ்க்கை ஒரு புதிய வெற்றியை நோக்கி நகரும். முடிவுகளை சிறப்பாக எடுப்பீர்கள். நல்ல வேலை மாற்றம் கிடைக்கும். வருமானத்திற்கான பல வழி திறக்கும். இவர்களுக்குத் தங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணத்திற்கு பஞ்சம் வராது.
சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி ஒரு நல்ல காலத்தை அமைத்து கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற பல வழிகள் கிடைக்கும். இதுவரை திருமணம் நடைபெறாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உறவுகளுக்குள் பரஸ்பர புரிதல் மேலும் வலுப்பெறும். முந்தைய நிலையை விட நிதி நிலைமை மேம்படும்.
துலாம்
- துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு பகவான் நட்சத்திரத்தின் வழியாகச் செய்யும் சஞ்சாரம் சுப பலன்களைப் பெற்றுத்தரும். தன்னம்பிக்கை அதிகமாகும். ஒருவரின் ஆளுமை மேலும் வசீகரமிக்கதாகத் திகழும். தனிப்பட்ட மகிழ்ச்சி மேம்படுவதுடன், சமூக அந்தஸ்தும் உயரும். புதிய வேலைவாய்ப்புகள் அமையக்கூடும். செல்வம் செழிப்புடன் வாழ பல வழிகள் கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு பகவான் வழியாகச் செய்யும் சஞ்சாரம் மிகவும் சுபமானதாக அமையும். இவர்கள் தங்கள் தொழில் முயற்சிகளில் வளர்ச்சியை அடைவார்கள். அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் வாழ்க்கையில் முக்கியமான பல விடயங்களை சிந்தித்து எடுப்பீர்கள். இவர்கள் முழுமையான ஆதரவைப் பெறுவார்கள். எடுக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).