மன அழுத்ததிற்கும் சுடுநீருக்கும் என்ன சம்பந்தம்? தெரிஞ்சிக்கோங்க..!
இன்றைய காலத்தில் அதிக எடை பிரச்சினையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சரியான உணவு பழக்கங்கள், உடற்பயற்சி, சிறந்த வாழ்க்கை முறை இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் மாத்திரமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
எடை அதிகரிப்பு பிரச்சினையில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பை தடுக்க வேண்டும் என்றால் தினமும் சாதாரண தண்ணீருக்கு பதிலாக சூடான நீரை பருக வேண்டும்.
இது கொழுப்பு செரிமானத்தை சீர்ப்படுத்தி கொலஸ்ட்ரால் தேக்கத்தை இல்லாமலாக்குகின்றது.
அந்த வகையில் சுடுநீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுடுநீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
1. சுடுநீர் பருகுவதால் சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.
2. சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். இதனால் மூக்கிலிருந்து இரத்தம் வழிவது குறையும்.
IMAGE - fitterfly
3. வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்த சுடுநீர் உதவுகின்றது.
4. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் சுடுநீர் குடிப்பது நன்று. ஏனெனின் இது குடல் இயக்கத்தை சீராக்கும்.
5. மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும்.