குளிர் காலத்தில் சைனஸ் பிரச்சினையால் அவதியா? தீர்வு இதோ
மழை மற்றும் குளிர் காலங்களில் வரும் நோய்களில் ஒன்றாக சைனஸ் பிரச்சினை இருக்கின்றது.
மண்டை ஓட்டில் உள்ள வெற்று குழிகள் தான் சைனஸ். மண்டை ஓட்டின் முன் பக்கத்தில், கன்னம், நெற்றி, கண்களுக்கு இடையே, மூக்கின் பின்னால் உள்ளது.
இந்த வெற்று துவாரங்கள் சளி சவ்வு எனப்படும் ஒரு வகை தோலால் உட்புறத்தில் வரிசையாக அமைந்துள்ளன.
சளி சவ்வு நோய்த்தொற்றுகள் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு ஆளாகக்கூடும். அவை வீக்கம் மற்றும் சைனஸ் அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அடைப்பு காரணமாக சைனஸ்கள் வெளியேற முடியாமல் போகும் போது, அவை வீங்கி, அவற்றில் அழுத்தம் உருவாகிறது. இந்த அழுத்தம் முகம், மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் வழியை ஏற்படுத்துகின்றன.
மேலும் குளிர்காலங்கள் சைனஸ் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வாறு சைனஸ் பிரச்சினையிலிருந்து வெளியேற சில வீட்டு வழிமுறைகளைக் காணலாம்.
ஆவிபிடித்தல்:
ஆவிபிடித்தல் ஜலதோஷம், தலைவலிக்கு தற்காலிக நிவாரணம் என்று நாம் நினைத்து வருவது உண்மை இல்லை.
தினமும் ஆவி பிடித்து வந்தால் தலை மற்றும் மூக்கில் இருக்கும் சளி கொஞ்சம் கொஞ்சமாக உருகி வெளியேறுவதுடன் சளி உடலில் தங்கி தொந்தரவினை ஏற்படுத்தாது.
ஓய்வு:
இரவு தூக்கம் மற்றும் ஓய்வு சைனஸ் பிரச்சினையை குறைக்கின்றது. வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைத் தாக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் விளைவாக சைனஸ் வெளியிடப்படுகின்றது.
நீரேற்றம்:
சரியான இடைவெளியில் தண்ணீர் பருகுவது நீரிழப்பு தடுக்கப்படுகின்றது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நாசி சளி வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சைனஸின் வடிகால் ஊக்குவிக்கப்படும்.
உயரமான தலையணை:
உயரமான தலையணை பயன்படுத்துவது சைனஸ் பிரச்சினையை குறைக்கின்றது. காரணம் தூங்கும் போது, தலையணையால் தலையை உங்கள் மார்பு மட்டத்திற்கு மேலே உயர்ந்தி வைத்து தூங்கும் போது, சைனஸ்கள் சிறப்பாக வெளியேற உதவியாக இருக்கின்றது.
யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் :
சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் சுவாச பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற பயிற்சியினை தவறாமல் செய்ய வேண்டும்.
பேஸ் மசாஜ்:
மூக்கு மற்றும் கன்னங்களைச் சுற்றியுள்ள நிணநீர் வடிகட்டலுக்கு முக மசாஜ் உதவி செய்கின்றது.
உப்பு நீரில் கழுவுங்கள்:
உப்பு நீர் முறை என்பது உப்பு, பேக்கிங் சோடா போன்றவற்றை கலந்து அதை மூக்கு துவாரத்தில் இழுத்து வெளியே விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதினால், சைனஸ் பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும் என்று கூறுகின்றனர்.