மாலை வேளையில் நடைபயிற்சி செய்தால் இந்த நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நடைபயிற்சி செய்யுங்கள் என்றால் பெரும்பாலானோர் காலை வேளையை தான் தெரிவு செய்வார்கள்.
ஆனால் நடைப்பயிற்சியை காலையில் செய்வதை போல் மாலையில் செய்தாலும் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
மாலை வேளையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடப்பது உடலுக்கு நல்ல பயிற்சியைத் தரும்.
அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மாலையில் நடைப்பயிற்சிக்கு செல்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நடைபயிற்சியின் பலன்கள்
1. மாலை வேளையில் நடைப்பயிற்சிக்கு செல்வதால் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்து கொள்ள முடியும். மனம் அமைதியின்றி தவிப்பவர்கள் இப்படி மாலை வேளைகளில் நடைப்பயிற்சி சென்றால் மனம் அமைதியடையும். அத்துடன் ஒரு வகையான புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
2. நீண்ட வேலை செய்து களைப்படைந்த பின்னர் யாரும் இல்லாமல் தனிமையில் மெதுவாக நடந்து சென்றால் களைப்பு குறையும். அத்துடன் குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பை பார்த்து ஒரு விதமான புத்துணர்வு கிடைக்கும். கடின உழைப்பிற்கு பின்னர் இப்படியான சந்தோஷங்கள் தான் அடுத்த நாளைக்கு நம்மை கொண்டு செல்கின்றன.
3. மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இரவில் ஒரு நல்ல தூக்கம் அவசியம். ஒழுங்காக தூங்காத ஒருவருக்கு காலப்போக்கில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் மாலை வேளைகளில் அப்படியே நடைப்பயிற்சி செய்யலாம். இது இரவில் மன நிம்மதியை கொடுக்கும்.
4. நாள் முழுவதும் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதாலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாலும் பலர் முதுகுவலியால் அவஸ்தைப்படுவார்கள். இது போன்ற நோய் நிலைமை வராமல் தடுக்க வேண்டும் என்றால் மாலை வேளைகளில் மெதுவாக நடந்து செல்லலாம். முதுகு வலியும் குறையும்.
5. சிலர் மன அழுத்த பிரச்சினையால் அதிகமாக அவஸ்தை அனுபவிப்பார்கள். இப்படியான பிரச்சினை இருப்பவர்கள் மாலை வேளைகளில் தனியாக அல்லது மனதிற்கு பிடித்த ஒருவரை அழைத்து கொண்டு நடைப்பயிற்சி செய்யலாம். இது உடலையும், மனதையும் அமைதியடையச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |