மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த பழங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்
எமது தினசரி உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டியது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
ஏனெனில் இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. போதுமான அளவு நார்ச்சத்து உடலுக்கு கிடைக்காத பட்சத்தில் செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் போன்ற நிலைமை உருவாகும்.
தற்காலத்தில் பலருக்கு‘மலச்சிக்கல்’ என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காக, மருத்துவமனையை பலர் நாடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு மருந்துக்கள் இன்றி வீட்டிலேயே தீர்வு கொடுக்கும் பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டிராகன் பழங்கள்
டிராகன் பழத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் தோள் படிந்தது என இரண்டு பழங்கள் உள்ளது. இந்த இரண்டு பழங்களிலுமே கருப்பு சீட்கள் இருக்கின்றன. இதில், 5 கிராம் ஃபைபர்கள் உள்ளது. இதனால், இப்பழத்தை ஜூஸ் ஆகவோ, அப்படியேவோ சாப்பிடலாம்.
பேரிக்காய்
பேரிக்காயில் 5.5 கிராம் ஃபைபர் சத்துக்கள் உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 20% ஃபைபர் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதனால், தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிள்
ஆப்பிள் பழம், சாறாக குடிக்கவும் அப்படியே சாப்பிடவும் உகந்த பழமாகும். இதில், 4 கிராம் ஃபைபர் சத்து உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவதால் குடல் இயக்கம் சரியாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிட்ரஸ் பழங்கள்
திராட்சை பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டவை சிட்ரஸ் பழங்கள் வகையில் அடங்கும். இந்த பழங்களிலும் 4 சதவிகித ஃபைபர் சத்துக்கள் உள்ளன. எனவே, இந்த பழங்களை சாப்பிட்டாலும் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருப்பார்களாம்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா?
கிவி பழங்கள்
கிவி பழத்தில் 2 கிராம் ஃபைபர் உள்ளது. இது, வயிறு மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. சாலட் அல்லது முழு பழமாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதை ஸ்மூதியாகவும் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |