இருக்கு வயதே ஏறாதா? 49 வயதிலும் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை மீனாவின் நியூ லுக்!
நடிகை மீனா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பொன்நிற சேலையில், அசத்தல் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை மீனா
90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் முக்கிய இடம் வகிப்பவர் தான் நடிகை மீனா. இவர் 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் இந்த காலத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தது.
அதனை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரையில் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் மீனா.

இவர் நடிப்பில் இறுதியாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 49 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் மீனா தங்க நிற புடவையில் தற்போது வெளிளிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
