அரிய வகை திமிங்கலம் தற்கொலை செய்த அதிர்ச்சி காட்சி
43 ஆண்டுகளாக கண்ணாடி தொட்டியில் அடைத்து வைக்கப்பட்ட உலகின் தனித்துவமான திமிங்கலம் 'கிஸ்கா' உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘கிஸ்கா’ திமிங்கலம் உயிரிழந்தது
3 வயது குட்டியாக இருந்த போது ஓர்க்கா இனமான கிஸ்கா திமிங்கலம் 1979ம் ஆண்டு ஐஸ்லேந்து அருகே பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 43 ஆண்டுகளாக கண்ணாடி தொட்டியில் அடைக்கப்பட்டு வெவ்வேறு கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
கடைசியாக கனடாவிற்கு அழைத்து வரப்பட்டது. கிஸ்கா திமிங்கலம், முதலில் தன் ஜோடி திமிங்கலத்தை இழந்தது. இதன் பிறகு தன்னுடைய 5 குட்டிகளையும் இழந்தது.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொட்டியில் அடைக்கப்பட்ட கிஸ்கா தனிமையை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணாடி தொட்டியில் தன் தலையை மோதி இடித்துக் கொண்டது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
வீடியோ வைரலானதால் சமூக ஆர்வலர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், கிஸ்கா உயிரிழந்தது.
தற்போது கிஸ்கா நீர்த்தொட்டியில் தலையை அடித்துக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Canada’s Last Captive Killer Whale Dies - Reports
— ??Jacob??Charite?? (@jaccocharite) March 12, 2023
47 year old “Kiska” died after four months in captivity at a theme park in Niagara Falls, Ontario, the Govt announced Friday.
The large mammal was captured in Icelandic waters in 1979.
1/ pic.twitter.com/5dUjGrHf94