இயக்குனராகிய மகனை ஆணவக் கொலை செய்த பெற்றோர்... நடுநடுங்க வைத்த காரணம்
ஈரான் நாட்டில் பெற்றோர்களே தங்களது 47 வயது மகனை ஆணவக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டை சேர்ந்த சினிமா இயக்குநர் பாபக் கோரம்டின்(47). இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளதோடு, இவரது குறும்படங்கள் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாபக் கோரம்டின் உடல் ஈரான் நாட்டின் எக்படன் என்ற பகுதியிலிருந்த குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பொலிசார் அவரது பெற்றோர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது கோரம்டினை ஆணவக் கொலை செய்ததை அவரது தந்தை ஒப்புக் கொண்டதோடு, துண்டு துண்டாக வெட்டி அதை மறைக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோரம்டின் திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்ததும், பெற்றோர்களை துன்புறுத்தி வந்ததால் கொலை செய்ய திட்டமிட்டு, சாப்பாட்டில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துள்ளனர்.
பின்பு உடலை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர்.
இதனையடுத்து தாய் மற்றும் தந்தையை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், தனது மகனின் செயல்பாடுகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சமாக இருந்தது. இதனால் நாங்கள் ஒரு நாளும் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. யார் கூறுவதையும் கேட்காமல் விருப்பப்பட்டதைச் செய்து வந்தான்.
இதன் காரணமாகவே அவரை கொலை செய்ய நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் துளியும் வருந்தவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.