கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்! பகீர் காட்சி
மும்பையில் பாழடைந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பையில் உள்ள மேற்கு சாய்பாபா நகரின் அருகே 4 மாடி கட்டிடம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் பாழடைந்து இருப்பதாகவும் பயன்படுத்த தகுதியற்றது என ஏற்கனவே மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதன் காரணமாக கட்டிடத்தில் வசித்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நண்பகலில் கட்டிடம் திடீரென அப்பளம் போல நொறுங்கி விழுந்தது.

இதனிடையே போலீசார், தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய காட்சிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வரும் காரணங்களினால் கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.