நியூஸ் பேப்பரின் கீழ்ப் பகுதியில் இருக்கும் 4 வண்ண வட்டம்: இதற்கு அர்த்தம் என்ன?
புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் கீழ் பகுதியில் இருக்கும் நான்கு வண்ண வட்டங்கள் பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நான்கு வண்ண வட்டங்கள்
தற்போது தொலைபேசியின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றன. இந்த காரத்தினால் பலர் பத்திரிகை வாசிப்பபை மறந்து விட்டார்கள். ஆனால் தற்போதும் கூ பத்திரிக்கையில் செய்திகளை பார்ப்பதற்கே இருப்பவர்கள் இருக்கின்றனர்.
இதை ஒரு அன்றாட வழ்ககமாகவே வைத்துள்ளனர். இந்த செய்தி தாள்களில் செய்திகளை வாசிக்கும் போது அதன் கீழ் பகுதியில் 4 வண்ண வட்டங்கள் இருக்கும். இதற்கான அர்த்தம் பலருக்கும் தெரியாது.
இது முதன்மை நிறங்கள் என்று கூறப்படும் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களை மற்ற எந்த ஒரு நிறங்களை கலந்து உருவாக்க முடியாது. இதற்காகத்தான் அவை முதன்மை நிறங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நான்கு வட்டங்கள் CMYK என்று அழைக்கப்படுகின்றன. ‘C’ என்பது சியான் (நீலம்), ‘M’ என்பது மெஜந்தா, ‘Y’ என்பது மஞ்சள் மற்றும் ‘K’ என்பது கருப்பு.
இந்த CMYK குறிப்பிடுவதற்கான காரணம் செய்தித்தாள்களில் வண்ணமயமான படங்கள் மற்றும் தலைப்புச் செய்திகளைக் கொடுக்கும் போது CMYK வண்ணங்களில் அச்சிடுவது முக்கியமானதாகும்.
செய்திகளை தாள்களில் அச்சிடும் போது 4 வண்ணங்களில் ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பயன்படுத்தினால் தான் தெளிவான கூர்மையான நேர்த்தியான படங்களுடன் செய்தி கிடைக்கும்.
இது பயன்படுத்தவில்லை என்றால் ஒழுங்கற்ற மங்கலான படங்கள் நேர்த்தி இல்லாத செய்திகள் தான் கிடைக்கும். எனவே தான் இந்த CMYK பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட 4 வண்ணங்கள் பத்திரிக்கை மற்றும் புத்தகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஈகிள் பிரிண்டிங் நிறுவனம் CMYK மாடலை 1906 இல் அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர் இது ஒரு நிலையான நடைமுறையாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |