2026 இன் முதல் சூரிய பெயர்ச்சி - பணத்தை மூட்டை கட்டப்போகும் ராசிகள் எவை?
ஜனவரி 15, 2026 அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்திருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது. அந்த ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி சூரிய பகவான் ‘கிரகங்களின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றி கொள்வார்.
ஜோதிடத்தின் படி சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு செல்லும் போது தழிழ் மாதங்கள் பிறக்கும் எனப்படுகின்றது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 15 ஆம் தேதி, சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்கிறார்.
இந்த சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த 5 ராசிகள் எவை என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- சூரியனின் மகர ராசி பெயர்ச்சி மேஷ ராசியின் பத்தாவது வீட்டில நிகழும்.
- பத்தாவது வீடு தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
- சூரியனின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் உண்டாகும்.
- பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
- நீங்கள் வேலை மாற நினைத்தாலோ அல்லது பதவி உயர்வுக்காக காத்திருந்தாலோ நல்ல செய்திகள் கிடைக்கும்.
- பூர்வீக சொத்துக்களால் நிதி ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
- சூரிய பகவான் ரிஷப ராசியின் ஒன்பதாவது வீட்டில் பிரவேசிப்பார்.
- இதனால், துங்கிக் கொண்டிருந்த உங்கள் அதிர்ஷ்டம் விழித்தெழும்.
- நீண்ட தூர பயணங்கள் வெற்றிகரமாக அமையும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
- உயர்கல்வி அல்லது வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
- சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
- மேலும் பொங்கல் தினத்தன்று அவர் ஆறாவது வீட்டான ருண, சத்ரு மற்றும் ரோக வீட்டில் சஞ்சரித்தார்.
- இதனால் எதிரிகளை வெல்வீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
- நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வாய்ப்புள்ளது.
- ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
- சூரியன் உங்கள் மூன்றாவது வீடான முயற்சி மற்றும் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
- எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும்.
- உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
- குறிப்பாக இளைய சகோதரர்களின் வழியாக உதவிகள் கிடைக்கலாம்.
- மார்க்கெட்டிங், மீடியா அல்லது எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் ஒரு சிறந்த காலமாக அமையும்.
தனுசு
- தனுசு ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரிய பகவான் அமர்கிறார்.
- இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும்.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.
- நிதி சிக்கல்களில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.
- சேமிப்பு உயரும் பழைய கடன்களை அடைப்பீர்கள்.
- குழந்தை வரன் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்
- மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரிய பகவான் அமர்கிறார்.
- இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
- தலைமைப் பண்புகள் வெளிப்படும் அரசாங்க ரீதியான காரியங்கள் தடையின்றி முடிவடையும்.
- வேலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
- பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
- தொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).