சாணக்கிய நீதி : ஒரு நல்ல குடும்பத் தலைவனிடம் இருக்க வேண்டிய முக்கிய 4 குணங்கள்! உங்களிடம் இருக்கா?
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றி வாழ்வில் வெற்றி பாதையில் பயணிப்பவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அப்படிப்பட்ட மகத்துவம் மிக்க சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு சிறந்த குடும்பத்தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய 4 குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குடும்பத் தலைவனுக்கான முக்கிய பண்புகள்

ஞானம்
சாணக்கிய நீதியின்படி, குடும்பத் தலைவரின் முதன்மையான பண்பு ஞானமாகும். ஞானம் என்பது வெறும் கல்வி அறிவு மட்டுமல்ல; அந்த அறிவை சரியான நேரத்திலும் சூழ்நிலையிலும் திறம்படப் பயன்படுத்தும் திறனாகும். இது சிக்கல்களை முன்கூட்டியே உணர்ந்து, நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும், குடும்பத்தின் நீண்டகால நலனுக்கான திட்டங்களை வகுக்கவும் உதவுகிறது. இந்த பண்பு ஒரு குடும்ப தலைவனுக்கு இன்றியமையாதது என சாணக்கியர் குறிப்பிடுகின்றாார்.

வீரம்
வீரம் என்பது பயம், ஆபத்து மற்றும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனவலிமையாகும். குடும்பத்தின் நலனுக்காக கடினமான முடிவுகளை எடுப்பதிலும், நெருக்கடியான சூழ்நிலைகளில் உறுதியாக நிற்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு குடும்பத் தலைவர் எந்தச் சூழலிலும் முயற்சியைக் கைவிடாமல், குடும்பத்தைப் பாதுகாக்க முன்னின்று செயல்பட வேண்டும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் ஒரு குடும்பத்தை வழிநடத்த முக்கியமானது என சாணக்கிய நீதி குறிப்பி்டுகின்றது.

பொறுமை
பொறுமை என்பது சவால்கள் மற்றும் நெருக்கடிகளை அமைதியாகவும் நிதானமாகவும் கையாளும் திறனாகும். இது நீண்டகாலத் திட்டமிடல், பிரச்சினை தீர்வு மற்றும் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கு அவசியமான பண்பாகும்.
பொறுமை குடும்பத்தில் அமைதியையும் நிலையான முன்னேற்றத்தையும் உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே ஒரு சிறந்த குடும்ப தலைவனுக்கு இந்த குணம் முக்கியமாகின்றது.

ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுதல், சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுதல் மற்றும் பொறுப்புணர்வுடன் வாழ்தல் ஆகும்.
ஒழுக்கமுள்ள தலைவர் குடும்பத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதோடு, தனது செயல்களின் மூலம் மற்றவர்களுக்கும் நற்பண்பு, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுகிறார். எனவே ஒரு சிறந்த குடும்ப தலைவனி்டம் இந்த நான்கு பண்புகள் இருக்க வேண்டியது முக்கியம் என சாணக்கிய நீதி வலியுறுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |