காரில் இருந்த பெண்ணைக் கடத்த முயன்ற நால்வர்! வைரலாகும் வீடியோ
காரில் இருந்த பெண்ணை கடந்த முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவம்
ஹரியானா மாநிலத்தில் யமுனா நகரில் பெண்ணை காருக்குள் புகுந்து கடத்த முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை மாடல் டவுன் பகுதியில் உள்ள பிட்-7 ஜிம்மிற்கு வெளியே வந்த பெண் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
நான்கு பேரும் நண்பர்கள் மற்றும் கர்னாலைச் சேர்ந்த தினேஷ் மற்றும் யமுனாநகரில் வசிக்கும் விஷால், தீபக் மற்றும் ஷரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை கடத்திச் செல்ல வந்த நால்வர் அவருக்காக காத்திருந்து அவரது காரை சுற்றி சூழ்ந்து கொண்டனர், சிறிது நேரத்தின் பின்னர் அவர்களில் இருவர் காருக்குள் நுழைந்தனர்.
எதிர்த்துப் போராடிய பெண்
அவன் அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். மேலும் தனது காரில் அலாரம் அடித்து காரில் ஏறிய நால்வரையும் இறங்கி அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
#WATCH | Caught On Camera: Miscreants tried to kidnap a woman in Haryana's Yamuna Nagar city yesterday
— ANI (@ANI) January 1, 2023
After doing gym, the woman sat in her car. 4 people came & entered her car & tried to kidnap her. One accused has been caught. Probe underway: DSP Kamaldeep Singh, Yamuna Nagar pic.twitter.com/XvuN22yfWy
இந்த சம்பவம் முழுவதும் ஜிம்மிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அந்த நபர்களை கைது செய்து யமுனா நகர் பொலிஸில் ஒப்படைத்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யமுனாநகர் பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிஸ் (SHO) இன்ஸ்பெக்டர் கமல்ஜீத் சிங், அந்த பெண்ணின் அறிமுகமானவர்களில் ஒருவர் அந்தக் காட்சியைக் கண்டு உதவிக்கு அழைத்ததாகக் கூறினார்.
குறித்தக் கடத்தல்காரர்களின் நோக்கம் அந்தப் பெண்ணைக் கடத்தி கொள்ளையிடும் திட்டத்தில் இருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.