ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கே நான்கு குழந்தைகள் பிறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவருக்கு ஏற்கனவே ஒரு பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், மற்றொரு பிரசவத்தில் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இதுகுறித்து சத்தாரா மாவட்ட மூத்த அறுவைசிகிச்சை நிபுணர் கூறுகையில், அரசு சுகாதார நிலையத்துக்கு இது ஒரு மைல்கல் ஆகும், தாயின் உயிரையும், குழந்தைகளின் உயிரையும் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் என தெரிவித்தார்.
தொடர் கண்காணிப்பு
34 வார கர்ப்பமாக இருந்த குறித்த பெண்ணுக்கு, பிரசுவிப்பதில் சிக்கல்கள் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சத்தாரா மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் தொடர் கண்காணிப்பின் கீழ் 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் கடந்த 12ம் திகதி பிறந்துள்ளது.
குழந்தைகள் குறைவான எடையுடன் இருப்பதால் அவசரசிகிச்சைபிரிவில் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
