பாம்புகளுக்கு கண் தெரியாதா? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்!
பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதைவிட பல மடங்கு அதிகமாக அவற்றை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில், பாம்புகளுக்கு கண் நன்றான தெரியும் என்று ஒரு சாராரும், பார்வைதிறன் அவ்வளவாக என்று ஒருசாராரும் கருதுகின்றார்கள். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பாம்புகளுக்கு கண் தெரியுமா?
அறிவியல் ஆய்வுகளின் பிரகாரம், பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைப் போல நன்றாகப் பார்ப்பதில்லை, ஆனால் அசைவைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளன.
பிளாக் மாம்பாஸ் போன்ற பதட்டமான மற்றும் எச்சரிக்கையான பாம்புகள் பொதுவாக வேகமாகவும் ஒழுங்கற்றதாகவும் நகரும் நபரால் அச்சுறுத்தப்படுகின்றது.
இவ்வகை பாம்புகளுக்கு பார்வை திறன் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பரவலான பெரும்பாலான பாம்புகளுக்கு கண் தெரியும் என்றாலும், அவற்றின் பார்வை திறனில் மாற்றங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
பகல் பொழுதில் உணவு தேடும் பாம்புகள், இரவில் உணவு தேடும் பாம்புகளை விடவும் நன்றாக பார்க்கும் திறன் கொண்டவையாகும்.
கண் பார்வை குறைவாக இருக்கும் பாம்பு இனங்கள் வாசனை மற்றும், அதிர்வுகளை கொண்டு தனது இரையை அடையாளம் கண்டுக்கொள்ளும். மனிதர்கள் அருகில் செல்வதையும் அவை அதிர்வுகளின் மூலமே அறிந்துக்கொள்கின்றன.
மலைப்பாம்புகள் உடல் சூட்டை கொண்டு மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளையும் அறிகின்றன. ஆனால் மரத்தில் ஏறும் ஆற்றல் கொண்ட பாம்பு இனங்களுக்கு மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் பார்வை திறன் சற்று கூர்மையானதாக இருக்கும்.
மண்ணுக்கு அடியில் வாழும் ஆற்றல் கொண்ட பாம்புகளுக்கு கண்பார்வை மங்கலாகவே இருக்கும். ஆனால் பெரும்பாலும் தோலுரிக்கும் காலப்பகுதியில் எல்லா பாம்புகளுக்குமே பார்வை திறன் சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
